உள்ளடக்கத்துக்குச் செல்

சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்
中国东方航空公司
Zhōngguó Dōngfāng Hángkōng Gōngsī
IATA ICAO அழைப்புக் குறியீடு
MU CES CHINA EASTERN
நிறுவல்25 சூன் 1988
மையங்கள்
  • குன்மிங் சாங்சுயி பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • சாங்காய் ஹோன்ஜியோ பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • சாங்காய் புடோங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • சியான் சியான்யங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
கவன செலுத்தல் மாநகரங்கள்
அடிக்கடி பறப்பவர் திட்டம்ஈஸ்டர்ன் மைல்சு
கூட்டணிஇசுக்கைடீம்
கிளை நிறுவனங்கள்
  • சீனா சரக்கு ஏர்லைன்ஸ்
  • சீனா யுனைடைடு ஏர்லைன்ஸ்
  • ஜெட்ஸ்டார் ஆங்காங்
  • ஜோய் ஏர்
  • சாங்காய் ஏர்லைன்ஸ்
வானூர்தி எண்ணிக்கை430க்கும் மேலாக
சேரிடங்கள்1000
தலைமையிடம்சாங்காய் ஹோன்ஜியோ பன்னாட்டு வானூர்தி நிலையம்
சாங்காய், சீன மக்கள் குடியரசு
Revenue CN¥ 82.40 பில்லியன் (2011)[1]
இயக்க வருவாய் CN¥ 4.172 பில்லியன் (2011)[1]
நிகர வருவாய் CN¥ 4.575 பில்லியன் (2011)[1]
மொத்த சொத்துக்கள் CN¥ 114.73 பில்லியன் (2011)[1]
மொத்த சமபங்கு CN¥ 20.12 பில்லியன் (2011)[1]
பணியாளர்கள்63,781 (2011)[1]
வலைத்தளம்global.ceair.com

சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் (China Eastern Airlines Corporation Limited, எளிய சீனம்: 中国东方航空公司, பேச்சுவழக்கில் 东航) (SSE: 600115 SEHK: 0670 நியாபசCEA) சீன மக்கள் குடியரசின் சாங்காயில் சாங்காய் ஹோன்ஜியோ பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்சின் கட்டிடத்திலிருந்து இயங்கும் வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும்.[2][3] இது உள்நாட்டு, வட்டார மற்றும் பன்னாட்டு வான்வழிச் சேவைகளை வழங்கி வரும் முதன்மையான சீன நிறுவனமாகும். இதன் முதன்மை முனைய மையங்களாக சாங்காய் புடோங் பன்னாட்டு வானூர்தி நிலையம், சாங்காய் ஹோன்ஜியோ பன்னாட்டு வானூர்தி நிலையங்களும் [4] இரண்டாம்நிலை முனைய மையங்களாக குன்மிங் சாங்சுயி பன்னாட்டு வானூர்தி நிலையமும் சியான் சியான்யங் பன்னாட்டு வானூர்தி நிலையமும் விளங்குகின்றன. ஏற்றிச் செல்லும் பயணிகள் அடிப்படையில் சீனாவின் இரண்டாவது மிகப்பெரும் வான்சேவையாளராக விளங்கும் இந்நிறுவனம் சந்தை மதிப்பீட்டளவில் உலகின் மூன்றாவது பெரும் வான்சேவை நிறுவனமாக உள்ளது. தனது துணை நிறுவனமான சாங்காய் ஏர்லைன்சுடன் இசுக்கைடீம் கூட்டணியில் சூன் 21, 2011இல் இணைந்தது.[5]

2010இல் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்சு 64.93 மில்லியன் உள்ளூர் மற்றும் பன்னாட்டு பயணிகளை ஏற்றிச் சென்றது. இதே ஆண்டில் நிகர இலாபமாக CNY5.3 பில்லியன் ($807 மில்லியன்) ஈட்டியது.[6]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "2011 Form 10-K, China Eastern Airlines". Google Invester.
  2. "Exhibit B." p. 2. "2550 Hongqiao Road Hongqiao International Airport China Eastern Airlines Building" (Archive)
  3. "China Eastern Airlines Corp. Ltd. (CEA)." Yahoo! Finance. Retrieved 2009-10-03.
  4. "Directory: World Airlines". Flight International: p. 64. 3 April 2007. 
  5. Cantle, Katie (23 June 2011). "China Eastern becomes 14th SkyTeam member". ATWOnline. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17.
  6. "China Eastern Airlines Co - DJ China Eastern Airlines Net Profit Surges To CNY4.96 Bln". Morningstar.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2012-04-28.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனா_ஈஸ்டர்ன்_ஏர்லைன்ஸ்&oldid=3357227" இலிருந்து மீள்விக்கப்பட்டது